ஊத்துக்கோட்டை, ஜூன் 3: கோயிலுக்கு வரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை திருச்செந்தூரில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக, நேற்று பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்ட தொடக்க விழா நடந்தது. இதில், வேலூர் மண்டல இணை ஆணையர் வனிதா தலைமை தாங்கினார். திருவள்ளூர், உதவி ஆணையர் சிவஞானம், கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சன் லோகமித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோயில் செயல் அலுவலர் பிரகாஷ் வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திருவள்ளூர் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்எஸ்கே ரமேஷ்ராஜ் பக்தர்களின் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் சத்தியவேலு, மீஞ்சூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜா, சோழவரம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆனந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, அவைத்தலைவர்கள் ரவிச்சந்திரன், முனிவேல், முன்னாள் மாவட்ட பிரதிநிதி தமிழரசன், மொய்தீன், ராஜா, சம்பத், சிறுவாபுரி கோயில் செயல் அலுவலர் மாதவன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல், திருத்தணி முருகன் கோயிலில் கோயில் இணை ஆணையர் ரமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி கலந்துகொண்டு பச்சிளம் குழந்தைகளுக்கு பால் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ஏராளமான பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியில், உதவி ஆணையர் விஜயகுமார், கண்காணிப்பாளர் கஜேந்திரன், பேஸ்கர் அன்பழகன் உள்பட கோயில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.