Monday, February 26, 2024
Home » பெரியபாளையம் அருகே பாலேஸ்வரம் டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூல்: மதுபிரியர்கள் குற்றச்சாட்டு

பெரியபாளையம் அருகே பாலேஸ்வரம் டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூல்: மதுபிரியர்கள் குற்றச்சாட்டு

by Ranjith

 

பெரியபாளையம், ஜன. 22: பெரியபாளையம் அருகே பாலேஸ்வரம் அரசு டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் பணம் வசூலிப்பதாக மதுபிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் பின்புறம் பாலேஸ்வரம் பகுதியில் 9067 எண் கொண்ட அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் நாள்தோறும் 1000க்கும் மேற்பட்ட குடிமகன்கள் மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் இங்கு அரசு நிர்ணயித்த விலையை விட 10 முதல் 40 ரூபாய் வரை கூடுதலாக வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குவாட்டர் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10ம், ஆப் பாட்டிலுக்கு ரூ.20ம், புல் பாட்டிலுக்கு ரூ.40ம், உயர் ரக மதுபானம் என்றால் ரூ.60 முதல் ரூ.80 வரை கூடுதலாக வசூலிப்பதாக மது பிரியர்கள் குமுறுகின்றனர். கூடுதலாக பணம் வசூலிக்க கூடாது என்று அரசு அறிவிப்பு பற்றி கேட்டால் மதுபான கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அதனை காதில் வாங்கிக் கொள்வது இல்லை.

ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் வீதத்தில் ஒரு நாளைக்கு ஒரு அரசு மதுபான கடையில் பல ஆயிரம் ரூபாய் வசூல் ஆகிறது என்றும் மதுபிரியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதுபோன்று அடாவடி வசூல் செய்யும் விற்பனையாளர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிமகன்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த ஆண்டு டாஸ்மாக் கடையில் அரசு நிர்ணயித்தை விலையை விட கூடுதலாக வசூல் செய்யும் விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் அனைத்து மண்டல மேலாளர்கள் மற்றும் பொறுப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

seventeen + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi