உடுமலை, ஆக. 15: உடுமலை அருகே உள்ள பெரியபாப்பனூத்து ஊராட்சி விளாமரத்துபட்டியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.86 மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். விளாமரத்துப்பட்டியில் நடந்த விழாவில் ஈஸ்வரசாமி எம்.பி., உடுமலை மத்திய ஒன்றிய திமுக செயலாளர் செந்தில்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் செழியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் மெய்ஞானமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர் மலர்விழி, ஒன்றிய கவுன்சிலர் புவனேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் பாபு, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மொடக்குபட்டி ரவி, மணிகண்டன், முருகானந்தம், சரவணசெல்வகுமார், விளாமரத்துபட்டி தங்கவேலு, நடராஜ், கார்த்திக்குமார், பிரகாஷ், புருசோத்தமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரியபாப்பனூத்து கிராமத்தில் சமுதாய கூடம் திறப்பு
previous post