அரியலூர், ஆக 3: அரியலூர் மேலத்தெருவிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த கோயிலான பெரியநாயகி அம்மனுக்கு ஆடி 3 ஆம் வெள்ளியையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பெரியநாயகி அம்மன் பல்வேறு வகையான மூலிகைகள், பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் அம்மனுக்கு பட்டுப் புடவைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபதாரனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.