பெரியகுளம், நவ. 4: பெரியகுளம் நகர்மன்ற மாதாந்திர கூட்டம் நகர்மன்ற தலைவர் சுமிதா தலைமையில், நகராட்சி ஆணையாளர் கணேசன் முன்னிலையில் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகர்மன்ற கூட்டம் துவங்குவதற்கு முன்பாக பெரியகுளம் பேருந்து நிலைய இடமாற்றம் செய்ய கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கூட்ட அரங்கிற்குள் வந்து போராட்டம் நடத்தியதால் கூட்டம் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
அந்த தீர்மானத்தை கை விடுவதாக நகர்மன்ற தலைவர் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.இதனைத் தொடர்ந்து 7வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஹசீனா, தனது வார்டு பகுதிக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கேள்வி எழுப்பினார். இதற்கு நகர்மன்ற தலைவர் கோரிக்கையை நிறைவேற்றுவதாக பதிலளித்தார்.