தேனி, நவ.13: பெரியகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தேர்தல் வாக்குச்சாவடி பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தேனி அருகே மதுராபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தேனி வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் பி.டி.செல்ல பாண்டியன் தலைமை வகித்தார். பெரியகுளம் தொகுதி எம்எல்ஏ சரவணகுமார் முன்னிலை வகித்தார். இதில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர், தேனி தொகுதி எம்பியுமான தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இக்கூட்டத்தில், தேர்தல் ஆணையம் மூலம் நடைபெறும் இரண்டு கட்ட சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாமில், முனைப்புடன் செயல்பட்டு புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும், 2026ம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் 200க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் திமுக நகர செயலாளர்கள் தேனி நாராயண பாண்டியன், பெரியகுளம் முகமது இலியாஸ், ஒன்றிய செயலாளர் பெரியகுளம் எல்.எம்.பாண்டியன், பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், தேனி நகர மன்ற துணை சேர்மன் வக்கீல் செல்வம், பெரியகுளம் யூனியன் சேர்மன் தங்கவேலு, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் டாக்டர் ராஜன், வக்கீல் ராஜசேகர்,
வக்கீல் ஸ்டீபன், தாமரைக்குளம் பேரூராட்சி சேர்மன் பால்பாண்டி தென்கரைப் பேரூராட்சி சேர்மன் நாகராஜ், தேனி முன்னாள் நகர பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன் மற்றும் தேனி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகர, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற தலைவர்கள் கவுன்சிலர்கள் சார்பு அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.