பெரியகுளம், செப்.11: பெரியகுளம் அருகே உள்ள எண்டப்புளி ஊராட்சிக்கு உட்பட்ட இ.புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கிராமமக்கள் மிகப்பெரிய பிளக்ஸ் பேனரை ஊரின் மையப்பகுதியில் வைத்திருந்தனர். இந்த பேனர் கிழிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கும்பக்கரை – பெரியகுளம் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை அடுத்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனை அடுத்து இ.புதுக்கோட்டை பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.