கிருஷ்ணராயபுரம், ஜூலை 3: கிருஷ்ணராயபுரம் அருகே கம்மநல்லூர் பெரியகாண்டி அம்மன், சோழ ராஜா கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே கம்மநல்லூரில் உள்ள பெரியகாண்டி அம்மன், வீர மலையாண்டி ,சப்த கன்னிமார்கள், சோழ ராஜா , பட்டத்து ராஜா சின்ன ராஜா மாயவர், ஆலாத்தி வெள்ளையம்மாள், தம்பிக்கு நல்லசாமி, பெரியசாமி, காத்தவராயர், மதுரை வீரர், அழகு மல்லான் ஆகிய பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.