புதுக்கோட்டை, ஜூன் 26: புதுக்கோட்டை மாவட்டம், பெரம்பூர் வீரம்மாகாளியம்மன் கோயில் காணிக்கை உண்டியலில் ரூ.10 லட்சத்து 39 ஆயிரத்து 125, 24 கிராம் தங்கம், 130 கிராம் வெள்ளி பொருட்கள் பக்தர்கள் செலுத்தியிருந்தனர். புதுக்கோட்டை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் உள்ள பெரம்பூர் வீரம்மாகாளியம்மன் கோயிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிர கணக்கான பக்த்தர்கள் வந்து செல்வர்.
அப்போது, வேண்டுதல்களை வைத்து பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்தினர். இந்நிலையில், நேற்று உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. கோவிலில் நிரந்தர உண்டியல்கள் மற்றும் தற்காலிக உண்டியல்கள் உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் வைரவன் ஆகியோர் முன்னிலையில் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில், ரூ.10 லட்சத்து 39 ஆயிரத்து ,125 பணம், 24 கிராம் தங்கம் மற்றும் 130 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தது.