பெரம்பலூர், மே 26: பெரம்பலூர் ராமகிருஷ்ணா ஆண்கள் பள்ளி மாணவர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் சாதனை படைத்துள்ளனர்.
பெரம்பலூர் ராமகிருஷ்ணா ஆண்கள் பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மே 15 முதல் 23ம் தேதி வரை நடைபெற்ற துப்பாக்கி சுடும் பயிற்சியில் கலந்து கொண்டனர்.ராமகிருஷ்ணா ஆண்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் ரஷ்வந்த், ஜெய்கிசன நவநீதகிருஷ்ணன், கவின்கிஷோர், ஹரிஷ், அன்பரசன், மனோஜ் தேவபிரசாத் ஆகிய மாணவர்கள் இப்பயிற்சியில் கலந்துக் கொண்டு முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர். சிவசுப்பிரமணியம் வாழ்த்துக்கள் கூறி பரிசுகள் வழங்கி பாராட்டினார். மேலும், இம்மாணவர்களை நிறுவனத் துணை தலைவர் எம்.எஸ்.விவேகானந்தன், பள்ளியின் முதல்வர் கலைச்செல்வி, ஒருங்கிணைப்பாளர்கள் மருததுரை, வாணி, பிரியா, செல்வராணி மற்றும் துறைத்தலைவர்கள் நல்லேந்திரன், முத்துக்குமார், கிருஷ்ணமூர்த்தி, கனகராசு, செல்வக்குமார், பாலகிருஷ்ணன், மகாலெட்சுமி மற்றும் இருபால் ஆசிரியர்களும் வாழ்த்தினர்.