பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் திமுக மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில், சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. தொகுதி பொறுப்பாளர் அன்னியூர் சிவா கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது குறித்து, பெரம்பலூர் மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று, பெரம்ப லூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிப் பொறுப்பாளர் அன்னியூர் சிவா கலந்து கொண்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுத்தபடி, பாக முகவர்கள் கூட்டம் நடத்துவது, கூட்டுறவு சங்கத் தேர்தலை முன்னிட்டு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினார். இதில், மாநில மருத்துவ அணி துணைச்செயலாளர் டாக்டர் வல்லபன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகதீஷ்வரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், நல்லதம்பி, ஜெகதீசன், நல்லதம்பி, பேரூர் செயலாளர்கள் ரவிச்சந்திரன், செல்வ லட்சுமி சேகர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.