பெரம்பலூர்,ஏப்.21: பெரம்பலூர் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் கற்பகம் ஆய்வு செய்தார். ஆர்-1144 பெரம்பலூர் தொ டக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் சங்க வளாகத்திலுள்ள இ- சேவை மைய செயல்பாட்டி னை மாவட்டக் கலெக்டர் கற்பகம் நேற்று (20ம்தேதி) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடந்த 2020-21 மற்றும் 2021-22 ஆகிய இரண்டு ஆண்டுகளாக பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து வருவதையும், கடந்த ஆண்டு 6,459 நபர்களுக்கு ரூ.57.1 கோடி மதிப்பீட்டில் கடன் வழங்கப்பட்டு அதனை தவணை தவறாமல் அனைத்து வாடிக்கையாளர்களும் குறித்த நேரத்தில் திருப்பி செலுத்தி சங்கத் தை 25 ஆண்டுகளுக்கும் மேலாக இலாபகரமாக செயல்படுத்தி முதலீட்டாளர்களுக்கு பங்குத் தொகையை பிரித்து கொடுத்து வெற்றி கரமாக செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூ ட்டுறவு கடன் சங்க செயல் பாடுகள், நடவடிக்கைகள், பராமரிக்கும்முறைகள் குறி த்து மாவட்டக் கலெக்டர் ஆ ய்வுசெய்தார்கள்.
மெலும் தீர்மான புத்தகம், பொது பதிவேடு, தின ரொக்க புத் தக பதிவேடு, வைப்பு பதி வேடு, தொடர் நிலை வை ப்பு பதிவேடு, சேமிப்பு கண க்கு பதிவேடு உள்ளிட்ட பல் வேறு பதிவேடுகளை கலெ க்டர் விரிவாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இந்த சங்கத்தின் கீழ் நகர்ப்பகுதியில் 04 முழு நேர நியாய விலைக் கடை களின் செயல்பாடுகளும், புறநகர் பகுதியில் 10 முழு நேர மற்றும் 04 பகுதி நேர நியாய விலைக் கடைகள் செயல்பாடுகள் குறித்தும், கடைகளில் தற்போதைய இருப்பு, தேவை, விற்பனை பதிவேடுகள் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க வளாகத்தில் செயல் பட்டு வரும் இ-சேவை மையத்தில் மாணவர்களுக்கான சாதி சான்றிதழகள், வருமான சான்றிதழ்கள், இரு ப்பிடச் சான்றிதழ்கள் உள் ளிட்டசான்றிதழ்களும், பொ துமக்களுக்கான பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், பட் டா மாற்றம் தொடர்பான சா ன்றிதழ்கள் பொதுமக்களுக்கு எந்தவித சிரமங்களும் இன்றி வழங்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டக் கலெக்டர், கடந்த ஆண்டு 3,914 சான்றிதழ்கள் வழங்க ப்பட்டதையும், இதுவரை விண்ணப்பித்த சான்றிதழ் களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்து, தகு தியுள்ள அனைத்து விண் ணப்பங்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத் தரவிட்டார்.
இந்நிகழ்வுகளில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் பாண்டியன், கூட்டு றவு சங்கச்செயலாளர் பிர பாகரன், பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.