பெரம்பலூர், மே 25: பெரம்பலூர் மாவட்டத்தில் 2023ம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற தகுதி யுடையவர்கள் விண்ணப் பிக்கலாம் என்று கலெக் டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில், மாநிலங்களில் நிலம், கடல் மற்றும் ஆகாயத்தில் பாராட்டத்தக்க வகையில் சிறப்பான சாதனை படைத்தவர்களை பாராட்டும் வகையில் டென்சிங் நார்கே தேசிய சாகச விருது வழங்கி கவுரவித்து வருகின்றது. அதன்படி 2023ம் ஆண்டிற்கு இவ்விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருது பெற விண்ணபிக்க தேவையான விபரங்கள் https://awards.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ளது. தகுதியுடையவர்கள் தேவையான விபரங்களை வருகிற 27ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து விண்ணப்பித்த விவரத்தின் நகலை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு வழங்க வேண்டும். எனவே, பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த இவ்விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய நபர்கள் உரிய தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர்
கற்பகம் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் டென்சிங்நார்கே தேசிய சாகச விருதுபெற விண்ணப்பிக்கலாம்
61