Thursday, February 29, 2024
Home » பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்கள்: பொதுமக்கள் பயன் பெற கலெக்டர் அழைப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்கள்: பொதுமக்கள் பயன் பெற கலெக்டர் அழைப்பு

by Ranjith

 

பெரம்பலூர்,டிச.27: பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (27ம்தேதி) சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், கிராம ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப் படவுள்ளது.

இம்முகாமில் தொற்றா நோய்களுக்கான இரத்த அழுத்த பரிசோ தனை, சிறுநீர் பரிசோத னை, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைக ளுடன் முழு ரத்த பரிசோ தனையும் இலவசமாக செய்து கொள்ளலாம். மேலும் பொது மருத்துவம், இசிஜி, பொது அறுவை சிகிச்சை, கர்ப்பிணி தாய் மார்கள் மற்றும் மகளிர் மருத்துவம், கண், காது மூக்கு தொண்டை மற்றும் பல் மருத்துவம், எலும்பி யல் மருத்துவம் மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்படவுள்ளது.

அதனடிப்படையில், இன்று (27ம்தேதி) பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட துப்புரவு பணியா ளர்கள், தூய்மை காவலர் கள், கிராம ஊராட்சி பணி யாளர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் அம்மாபாளை யம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மற்றும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், கிராம ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் கொளக்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இச்சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெறும் நபர்களுக்கு மேல்சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத் தின் கீழ் மேல் சிகிச்சை மேற்கொள் வதற்கு தக்க ஆலோசனை வழங்கப்படும். பணியாளர் கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என கலெக்டர் அதில் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

sixteen − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi