பெரம்பலூர்,ஆக.17: பெரம்பலூர் மாவட்டத்தில் 263 பள்ளிகளில்,16,020 மாணவ மாணவிகளுக்கு- வரும் 25 ஆம்தேதி காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப் படு கிறது. திட்டத்தை செம்மை யாக செயல்படுத்த அலுவலர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைத்துப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பெரம்பலூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று (16ம்தேதி) நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலை மை வகித்துப் பேசியதா வது : தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் காலை உணவுத் திட்டம் அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள தொடக்கப்பள்ளிகள், ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளிகள்,பேரூராட்சி பகுதி களில் உள்ள தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள் ளிகள் மற்றும் உயர்நிலை பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை என மொத்தம் 263 பள்ளிக ளில், 16,020 மாணவ மாண விகளுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. காலை உணவுத்திட்டத்திற் கான உணவு தயாரிக்கும் பணிகள் காலை 5.45 மணி முதல் 6மணிக்குள் தொடங்கப்பட வேண்டும். 8 மணிக்குள் உணவு சமைத்து முடித்து, 8.45 மணிக்குள் மாண வ மாணவிகளுக்கு உணவு பரிமாறப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் எத்தனை மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறப்பட்டது என்ற விபரத்தை பிரத்தேயக செயலி மூல மாக பதிவேற்றம் செய்திட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் முறையாக உணவு சமைக்கப்படுகின்றதா, குறித்த நேரத்தில் மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறப்படுகின் றதா, உணவு சுவையாக தரமாக உள்ளதா என்பது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் சமையல் செய்வதற்கு போ திய அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்து, மின்சார வசதி, குடிநீர் வசதி, பாத்திரம் கழுவுவதற்கான மேடைவசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவற்றை உடனடியாக சரி செய்திட வேண்டும். உணவு சமைப்பதற்கா ன பாத்திரங்கள் ஏற்கனவே அந்தந்தப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. உண வுப் பொருட்கள் கூட்டுறவுத் துறையின் மூலம் வழங்கப் பட்டு வருகிறது. முதலமை ச்சரின் காலை உணவுத் திட்டத்தை சிறப்பாக செய ல்படுத்துவதற்கு ஒவ்வொரு அலுவலரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை தொய்வின்றி நிறைவேற்ற வேண்டும், திட்டம் செம்மையாக நிறை வேற அலுவலர்கள் ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் லலிதா, மகளிர் திட்ட அலுவலர் அருணாச்ச லம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்து ணவு) நாராயணன், முதன் மை கல்விஅலுவலர் மணி வண்ணன் மற்றும் அனை த்து வட்டார வளர்ச்சிஅலுவ லர்கள்கலந்துகொண்டனர்.