பெரம்பலூர், ஜூலை 6:பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது கூட்டத்திற்கு தங்கமணி தலைமை தாங்கினார்.
மாவட்டத் தலைவர் சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட புதிய நிர்வாகிகளாக சுப்ரமணியன், மாவட்ட தலைவர் வையாபுரி, மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் சுப்ரமணியன், மாவட்ட அமைப்புச் செயலாளர் முருகேஸ்வரி, மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.