பெரம்பலூர், மே 21: பெரம்பலூர் பிரம்ம புரீஸ்வரர் கோயிலில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சி, துறையூர் சாலையில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நேற்று(20ம்தேதி) வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும், கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதன்படி பால், தயிர், சந்தனம், பழவகைளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் மற்றும் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டு, பைரவர் அருள் பெற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன் செய்திருந்தார். பூஜைகளை கௌரி சங்கர் சிவாச்சாரியார் செய்து வைத்தார்.
பெரம்பலூர் பிரம்ம புரீஸ்வரர் கோயிலில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேகம்
0
previous post