பெரம்பலூர், மார்ச் 10: பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் மாசி மகம் பெருந்திருவிழாவின் 5ம் நாளையொட்டி நேற்று இரவு 8.45 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு ஆனந்தவல்லி சமேத சந்திரசேகரன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் அகிலாண்டேஸ்வரி ரிஷப வாகனத்திலும், விநாயகர் மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானை முருகன் மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும், வான வேடிக்கைகள் மற்றும் மங்கள வாத்தியம் முழங்க வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
விழா, உபயதாரர் திருஞானம், முன்னாள் அரங்காவலர் வைத்தீஸ்வரன், காமராஜ், குமார், ராஜமாணிக்கம், மகேஸ்வரன், சுப்பிரமணியன், சிவனடியார்கள், பெரம்பலூர், துறை மங்கலம், அரணாரை, விளாமுத்தூர், எளம்பலூர், நெடுவாசல், சிறுவாச்சூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சிவபக்தர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஈசனை வழிபட்டனர். பெரம்பலூர் பிரம்ம புரீஸ்வரர் திருக்கோவில் மாசிமக பெருந்திருவிழா வை முன்னிட்டு ஆனந்தவல்லி சமேத சந்திரசேகரன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களு க்கு அருள்பாளித்தார்.