பெரம்பலூர்,மே21:சோமவார பிரதோஷ விழாவையொட்டி பெரம்பலூர் பிரம்மபுரீஸ் வரர் கோயிலில் சிவன் மற்றும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சியில் துறையூர் சாலையில் உள்ள அகிலாண்டேஸ் வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நேற்று சோமவார பிரதோஷ வழிபாடு மாலை 5:30 மணிமுதல் 6:45 மணி வரை நடைபெற்றது.
பிரதோஷ விழாவை யொட்டி அகிலாண் டேஸ்வரி சமேத பிரம்ம புரீஸ்வரர் மற்றும் நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், பழ வகைகள், இளநீர் மற்றும் வாசனைத் திரவியங்களு டன் சிறப்பு அபிஷேகம் முடித்து மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலை உட் பிரகாரம் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்வில் சிவனடியார்கள் மற்றும் வார வழிபாட்டு குழுவினர், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வ ரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் கோவிந்தராஜன் செய்திருந்தார்.