பெரம்பலூர்,ஆக.17: நடப்பு 2023-2024ம் ஆண்டிற்கான கரும்பு அரவைப் பணிகளை வருகிற நவம் 25ம் தேதிதொடங்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு பெரம்பலூர் சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்குப் பரிந்துரை செய்துள்ளது. பெரம்பலூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு இணைந்து நேற்று(16ம்தேதி) காலை சுமார் 11மணி அளவில் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் கள் ஏ.கே.ராஜேந்திரன் மற்றும் சீனிவாசன் ஆகியோரின் தலைமையில், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, எறையூரில் உள்ள பெரம்ப லூர் நேரு சர்க்கரை ஆலை நிர்வாக அதிகாரிகள் தன்ராஜ்,ஏடிஓ.முருகன், துணைபொறியாளர் திருத்தணிநாதன் ரசாயனார் மற்றும் சிடிஏ பொன்னுசாமி ஆகியோரின் மேற்பார்வையில்சர்க்கரை ஆலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது சங்கத்தின் செயலாளர் படைவெட்டி விஸ்வநாதன், பொருளாளர் முருகானந்தம், துணை செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, பெருமாள், துணைதலைவர் ஆறுமுகம் மற்றும் நிர்வாககுழுஉறுப்பி னர்கள் அகரம் சிகூர் பெருமாள், நல்லறிக்கை பாலகிருஷ்ணன், ராமர், கள்ளப்பட்டி சதாசிவம், வர தராஜன், சக்கர்சா, மாணிக்கம், மாயவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் சர்க்கரை ஆலை நடப்பு 2023-2024ம் ஆண்டிற்கான கரும்பு அரவைப் பணிகளை வருகிற நவம்பர் 25ம்தேதி தொடங்கிட ஆலையைத் தயார் படுத்த, கடந்த அரவையின் போது தேய்மானம் ஏற்பட்ட எந்திரங்களை சீரமைத்தும், பழுதடைந்த எந்திரங்களை மாற்றியும் தடைபடாமல் அரவைப் பணிகள் நடை பெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் பெரம்பலூர் எறையூர் சர்க்கரைஆலை நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தனர்.