பெரம்பலூர், ஆக.26: பெரம்பலூர் அருகே தீரன் நகரில் பூட்டி இருந்த வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், மொடக் குறிச்சி தாலுக்கா, பாரதி நகரைச் சேர்ந்தவர் செங்கோட்டையன் மகன் முருகேசன்(35). இவர் பெரம்பலூர் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ் சாலையில் உள்ள தீரன் நகர் பகுதியில் சூர்யா மூர்த்தி(60) என்பவர் வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். இவர் கடந்த 15ஆம் தேதி வேலை காரணமாக ஈரோடு சென்று விட்டார். அவரது மனைவி 17ம் தேதி தனது சொந்தஊரான பூலாம்பாடிக்குச் சென்று விட்டார்.
இந்த நிலையில் 17ம்தேதி முதல் ஒரு வாரத்திற்குள் வீட்டில் மின்விளக்கு எரிந்ததைக் கண்ட உரிமை யாளர் சூர்யாமூர்த்தி, ஆள் நடமாட்டம் இருப்பதைக் கண்டு முருகேசனுக்குத் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தபின் பெரம்பலூர் காவல்துறைக் கும் தெரிவித்துள்ளார். பின்னர் தீரன் நகர் வீட்டிற்கு வந்து பார்த்த முருகேசன் தம்பதியினர் வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டுப் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவைத் திறந்து அதில் வைத்திருந்த அரை பவுன் தோடு, கால் பவுன் தோடு, வெள்ளிக்கொலுசு, இடுப்பு வெள்ளிச்செயின், ரூ5,600 ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது தெரிய வந் தது. திருட்டுச் சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வரு கின்றனர்.