பெரம்பலூர், ஜூலை 23: பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. பெரம்பலூர் தாலுகா, செங்குணம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த 8ம் தேதி பூச்சொரிதலும், 11ம்தேதி காப்புக் கட்டுதலும் நடைபெற்றது. 12ம்தேதி முதல் 21ம்தேதி வரை ஒவ்வொரு நாள் இரவும் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.