பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே க.எறையூர் குவாரிகளிலிருந்து வரும் டிப்பர் லாரிகள் அதிவேகமாகவும் அதிக பாரம் ஏற்றியும் வருவதைக் கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலூர் அருகேயுள்ள கல்பாடி குவாரியிலிருந்து அருமடல் பகுதியில் உள்ள கிரஷர்களுக்கு, டிப்பர் லாரிகள் அதிக வேகமாகவும், அதிக பாரம் ஏற்றியும் செல்வதை தடுக்க கோரி க.எறையூர் சாலையில், காந்திநகர் சாலையில் பொதுமக்கள் ராமசாமி மகன் வரதராஜன்(33) என்பவர் தலைமையில் சுமார் 25பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த மருவத்தூர் எஸ்ஐ சங்கர் மறியல் நடந்த இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.