பெரம்பலூர்,மே.4:பெரம்ப லூரில் மாற்றுத் திறனாளி களுக்கான சிறப்புகுறைதீ ர்க்கும்நாள் கூட்டத்தில் 46 மனுக்கள் பெறப்பட்டது.காதொலிகருவி, ஊன்று கோல்கேட்டு மனுஅளித்த 3 மாற்றுத்திறனாளிகளுக்கு உடனே உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.பெரம்பலூர் மாவட்ட கலெ க்டர் அலுவலகக் கூட்ட அர ங்கில் நேற்று(3ம்தேதி) மா வட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான சிற ப்பு குறைதீர்க்கும் நாள் கூட் டம் நடைபெற்றது. கூட்டத் திற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலை மை வகித்தார். இந்தமாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் அடையாள அட் டை வேண்டி 7 மனுக்கள், வேலைவாய்ப்பு வேண்டி 5 மனுக்கள், மூன்று சக்கர சைக்கிள்வேண்டி 1மனு, இலவச வீடு மற்றும் பட்டா வேண்டி 12 மனுக்கள், வங்கிக் கடன் வேண்டி 6 மனுக் கள், உதவித்தொகை வே ண்டி 5 மனுக்கள், திருமண உதவித்தொகை வேண்டி 1 மனு, 100 நாள் வேலை முழு ஊதியம் கிடைக்க வேண்டி 2 மனுக்கள், ஏஒய்ஒய் குடு ம்ப அட்டை வேண்டி 1 மனு, உதவிஉபகரணங்கள் வே ண்டி 5 மனுக்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறு த்தி 46 மாற்றுத்திறனாளி கள் தங்களது கோரிக்கை களை மனுவில் குறிப்பிட்டு நேரில் அளித்தனர்.
இந்த கோரிக்கைமனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக் கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் கற்பகம் உறுதி யளித்தார். மேலும் காதொ லிகருவி, ஊன்று கோல் போன்ற உதவிஉபகரணங் கள் கேட்டு மனு அளித்த 3 மாற்றுத்திறனாளி பயனா ளிகளுக்கு உடனடியாகத் தீர்வு காணும் வகையில், நேற்றைய கூட்டத்திலேயே உதவிஉபகரணங்களை மா வட்டக் கலெக்டர் வழங்கி னார். கூட்டத்தில் பெரம்ப லூர் மாவட்ட சமூக பாதுகா ப்புதிட்டதனித்துணை கலெ க்டர் சரவணன், மாவட்ட மா ற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலர் பொம்மி உள்ளிட்டபலர் கலந்து கொ ண்டனர்.