பெரம்பலூர், ஆக. 23: பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பியாக ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டராக சதீஷ்குமார் ஆகியோர் புதிதாக பொறுப்பேற்றனர். பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த பழனிச்சாமி, சென்னைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம், விருத்தாசலம் உட்கோட்ட டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த ஆரோக்கியராஜ், பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டராகப் பணி புரிந்து வந்த கருணாகரன் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிமாறுதல் செய்யப் பட்டுள்ளார். இவருக்குப்பதிலாக நாகை மாவட்டம், நாகூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இருவரும் பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டனர், பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பஷேரா, பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பிக்கள் மதியழகன், பாலமுருகன் ஆகியோரை நேரில் சந்தித்து, வாழ்த்துப்பெற்றனர்.