பெரம்பலூர்,ஆக.19: பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. இந்த விழாவில், பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்ச் செம்மல் விருதுபெற்ற எழுத்தாளர் பெரியசாமி, பெரம்பலூர் மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் தலைவர் கவிச்சிட்டு வேல்இளங்கோ, முன்னாள் தலைமை ஆசிரியர் தேசிங்குராஜன், லாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர் மாயகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு தாசில்தார் சத்தியமூர்த்தி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் இளங்கோ உடனிருந்தார். விருதுபெற்ற தமிழ்ச் செம்மல்கள் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.