Thursday, February 22, 2024
Home » பெரம்பலூரில் சாலையோரத்தில் வடமாநிலத்தவர் தயாரிக்கும் கத்தி, அரிவாள் விற்பனை படுஜோர்

பெரம்பலூரில் சாலையோரத்தில் வடமாநிலத்தவர் தயாரிக்கும் கத்தி, அரிவாள் விற்பனை படுஜோர்

by Ranjith

 

பெரம்பலூர்,ஜன.5: பெரம்பலூரில் பல்வேறு பொது இடங்களில் கத்தி, வெட்டருவா, வீச்சருவா போன்றவற்றை சுடச்சுட செய்து விற்பனை செய்யும் வட மாநிலத்தவர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் கடந்த சில தினங்களாக பெரம்பலூர் நகரின் முக்கிய இடங்களான பழைய பஸ் ஸ்டாண்டு, புது பஸ் ஸ்டாண்டு அரியலூர் சாலை, ஆத்தூர் சாலை போன்ற இடங்களில் சாலையோரம் தார்ப்பாய் மற்றும் படுதா ஆகியவற்றின் மூலம் குடிசை அமைத்து தங்கிக் கொண்டு லாரி டிராக்டர் பழுது நீக்கும் பட்டறைகளில் கிடைக்கும் கனரக வாகனங்களில் பயன்படுத்தப்படும், உடைந்து போன இரும்பு பட்டைகளை வாங்கி வந்து, வெட்டி உருக்கி, தட்டித் தட்டி வெட்டருவா, வீச்சருவா, கத்தி, பட்டா கத்தி போன்ற கருவிகளையும், கோடாலி, களக்கட்டு, கருக்கருவா போன்றவற்றையும் சுடச்சுட வடிவமைத்து சாலையோரம் காட்சிப் பொருளாக வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

பெரம்ப லூர் மாவட்டத்தில் கடந்த வருடங்களில் பல்வேறு கொலைவெறித் தாக்குதல்கள் நடந்துள்ளதால், இது போல் வட மாநிலத்தவர்கள் அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடிய கொலை கருவிகளை விற்பனை செய்ய தடை விதித்து வட மாநிலத்தவரை போலீசார் கலையச் செய்தனர். அதேபோல் இப்போது மாவட்ட காவல்துறை இது போன்ற ஆபத்தான கருவிகளை சகஜமாக விற்பனை செய்ய அனுமதி அளிக்கக்கூடாது என பொதுமக்கள் மாவட்ட காவல்துறைக்கு வேண்டுகோள் விடுதுள்ளனர்.

You may also like

Leave a Comment

two × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi