பெரம்பலூர், ஆக. 7: பெரம்பலூரில் பள்ளிகளுக்கிடையேயான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் குறுவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. பெரம்பலூர் ரோவர் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குறுவட்ட அளவிலுள்ள 20க்கும் மேற்பட்ட பள்ளிகளைச்சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் குறுவட்ட அளவில் உள்ள பள்ளிகளை சேர்ந்த உடற் கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டிகளை நடத்தினர். பள்ளித் தலைமை ஆசிரியர் துரை ரவி சித்தார்த்தன் தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன், பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். போட்டிகளை பெரம்பலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுகானந்தம் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். உடற்கல்வி ஆசிரியர் விஜயகுமார் நன்றி தெரிவித்தார். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப் பட்டன.