பெரம்பலூர், ஆக. 28: பெரம்பலூரில் குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. பெரம்பலூர் குறுவட்ட அளவிலான தடகள விளை யாட்டுப் போட்டிகள் நேற்று (27ம்தேதி) பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற் றது. போட்டிகளுக்கான தொடக்க விழாவிற்கு பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் துரை. ரவி சித் தார்த்தன் தலைமை வகித் தார். பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். போட்டிகளை பெரம்பலூர் மாவட்ட உடற் கல்வி ஆய்வாளர் விஸ்வ நாதன் தொடங்கி வைத் தார்.
இதில் 14,17,19 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிக ளுக்கான 3000 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், கோலூன்றித் தாண்டுதல், மும்முறை தத்தித்தாண்டு தல் ஆகிய போட்டிகள் நடத் தப் பட்டன. பெரம்பலூர் குறுவட்ட அளவிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த உடற் கல்வி இயக்குனர், உடற் கல்வி ஆசிரியர்கள் போட்டி களை முன்னின்று நடத்தி னர்.வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்குசான்றிதழ் களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. சுமார் 450 மாணவ, மாணவியர் இந் தப் போட்டிகளில் பங்கு கொண்டு பரிசுகளைப் பெற்றனர். முடிவில் குறு வட்டபோட்டிகளின் இணை செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.