பல்லடம், ஆக. 15: பல்லடம் அருகேயுள்ள பெத்தாம்பாளையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் மரகத பூஞ்சோலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. பல்லடம் ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சியை சேர்ந்த பெத்தாம்பாளையத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள மரகத பூஞ்சோலை பூங்காவை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து பெத்தாம்பாளையத்தில் நடைபெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நா.சோமசுந்தரம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில், பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் தேன்மொழி (பல்லடம்), குமார் (பொங்கலூர்) பொங்கலூர் மேற்கு பொங்கலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அசோகன், பல்லடம் ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தசாமி, திருப்பூர் வனக்கோட்ட வனச்சரகர் சுரேஷ் கிருஷ்ணன், வனவர் உமா மகேஸ்வரி மற்றும் வனப்பணியாளர்கள், கணபதிபாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், பூமலூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரியங்கா, கணபதிபாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கதிரேசன், லோகநாதன், ராஜேஸ்வரி, செல்வம், ஊராட்சி செயலர் பிரபு சங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் துரைசாமி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் தேவராஜ், ரவிதண்டபாணி, கிளைக்கழக நிர்வாகிகள் கார்த்திகேயன், நாகராஜ், சண்முகம், வின்சென்ட் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கௌதம், ஒன்றிய மாணவரணி இந்திர விஜய், சமூக வலைதள பொறுப்பாளர் கோகுல் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேயர் தினேஷ்குமார் வழங்கினார்