பாலக்காடு, ஜூன் 4: பாலக்காடு மாவட்டம் ஷொர்ணூர் சந்திப்பில் திருவனந்தபுரம் மங்களூரு மாவேலி எக்ஸ்பிரஸில் பெண் பயணி ஒருவரின் கைபேக்கை திருடிய நபரை ரயில்வே போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். திருவனந்தபுரம் மங்களூரு மாவேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்ணிடம் கைப்பையை மர்மநபர் திருடி சென்றார். இது குறித்து அந்த பெண் ஷொர்ணூர் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் ஷொர்ணூர் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., அனில்மாத்யூ, ஆர்.பி.எப்., எஸ்.ஐ., ஷாஜூ தாமஸ், பாலக்காடு குற்றவியல்த்துறை எஸ்.ஐ., அஜித் அசோக் ஆகியோர் தலைமையில் போலீசார் திருடனை கண்டுப்பிடித்து அவரிடமிருந்து பெண் பயணியின் கைபேக்கை வாங்கி திருப்பிக்கொடுத்தனர். விசாரணையில் ஆலப்புழாவை அடுத்த தண்ணீர்முக்கத்தை சேர்ந்த அஜ்மல்ஷா (23) என தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெண் பயணி கைபேக்கை திருடிய நபர் கைது
0
previous post