திருவெறும்பூர், செப்.3: திருவெறும்பூர் அருகே பெண் துப்புரவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவெறும்பூர் பர்மா காலனியை சேர்ந்தவர் கற்பகவள்ளி (42). துப்புரவு தொழிலாளி. இவருக்கு 3 மகன்கள். யாரும் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடன் தொல்லை இருந்து வந்ததால், மனம் உடந்த கற்பகவள்ளி நேற்று காலை அப்பகுதியில் உள்ள உய்யகொண்டன் கரை சாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் கற்பகவள்ளி உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.