விருதுநகர்: விருதுநகர் அருகே நாராயணபுரத்தில் பெண் தலையாரியை வீடு புகுந்து தாக்கி தங்க நகை மற்றும் செல்போனை பறித்துச் சென்ற 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்னர். விருதுநகர்: விருதுநகர் அருகே உள்ள நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள்(37). செங்குன்றாபுரத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டிற்குள் நுழைந்த சிலர் செங்கலால் தாக்கியதோடு, கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயின் மற்றும் செல்போனை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது இதுகுறித்து, பாண்டியம்மாள் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார், சுப்பையா, காளியம்மாள், அழகேஸ்வரி, அழகர்சாமி, வீரம்மாள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.