நெல்லை, நவ.1: பணகுடி அருகே பெண் உள்ளிட்ட இருவரை தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள ரோஸ்மேரியாபுரத்தைச் சேர்ந்தவர் சுதன். இவரது மனைவி திலகா(20). இவர்கள் தங்களது மகனுக்கு அங்குள்ள கோவிலில் மொட்டை போடும் நிகழ்ச்சி வைத்துள்ளனர். இதற்கு அவர்களது தூரத்து உறவினரான பணகுடி அருகேயுள்ள நதிப்பாறையை சேர்ந்த பெவின்துரை(33) என்பவருக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் பெவின்துரை நிகழ்ச்சி நடக்கும் கோவிலுக்கு வந்துள்ளார். மேலும் அவர் திலகா குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டதுடன், திலகாவையும் தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்த திலகாவின் மாமனாரான அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரையும் பெவின்துரை தாக்கியுள்ளார். இதனால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பணகுடி எஸ்ஐ ஸ்டீபன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.