புதுக்கோட்டை,செப்.6: புதுக்கோட்டை மௌண்ட்சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. மௌண்ட்சீயோன் பள்ளிகளின் தலைவர் ஜோனத்தன் ஜெயபரதன் தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார். அதனைத்தொடர்ந்து டாக்டர்.இராதாகிருஷ்ணன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவிமரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு சேவையைப்பாராட்டும் விதமாக, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கவிதை மற்றும் பாடல் பாடினார்கள். மேலும் இராதாகிருஷ்ணன் வாழ்கை வரலாறு பற்றிய சொற்பொழிவு மற்றும் நாடகம் அரங்கேறியது. இவ்விழாவில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகளையும் நடத்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் கல்வி முதல்வர் குமரேஷ் செய்திருந்தனர்.