சேந்தமங்கலம், செப்.1: கொல்லிமலையில் பெட்டிக்கடை நடத்தி வந்த பெண்ணை பலாத்காரம் செய்த தோட்டக்கலை துறை ஊழியரை போலீசார் கைது செய்தனர். கொல்லிமலை திருப்புளிநாடு ஊராட்சி, கல்லேரி பகுதியை சேர்ந்தவர் சில்லு. இவரது மகன் சந்திரன்(34), கொல்லிமலையில் உள்ள தோட்டக்கலை துறையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன், குடிபோதையில் மதியம் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் சின்னையன் மனைவி மணிமேகலை(50) என்பவரை கடையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மணிமேகலை, சந்திரனுக்கு சித்தி முறை என கூறப்படுகிறது. இதுகுறித்து மணிமேகலை கொடுத்த புகாரின் பேரில், செங்கரை போலீசார் சந்திரனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.