மூணாறு, ஜூன் 18: மூணாறு அருகே உள்ள டோபி பாலம் பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா (54). நேற்று அதிகாலை, இவரது வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர், சகுந்தலாவின் கழுத்தில் இருந்த, 2.5 பவுன் செயினை பறிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். அப்போது அந்த மர்மநபர், சகுந்தலாவைத் தாக்கியுள்ளார். இதனால் சத்தம் கேட்டு வந்த அவரது பேரனையும் தாக்கிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரும், அடிமாலி தாலுகா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சகுந்தலா அளித்த புகாரின் பேரில், வெள்ளத்தூவல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.