சேலம், அக்.17: சேலம் அம்மாபேட்டை கொய்யாத்தோப்பு கிருஷ்ணன்புதூரைச் சேர்ந்தவர் கரும்பலியான். இவருக்கு ருக்மணி (58), லதா என்ற 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி ருக்மணிக்கும், 2வது மனைவி லதாவுக்கும் இடையே, நிலம் தொடர்பாக தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம், லதா, அவரது மகன் பிரகாஷ் (30) ஆகியோர் ருக்மணியிடம் தகராறு செய்து, அவரின் பைக்கில் குப்பைகளை கொட்டி உள்ளனர். மேலும் பிரகாஷ், ருக்மணியை தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த ருக்மணி சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி அம்மாபேட்டை போலீஸ் எஸ்ஐ ராஜசேகரன் விசாரணை நடத்தி, பிரகாஷ் மற்றும் லதா மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து பிரகாசை கைது செய்தனர். பிறகு அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.