வேலூர், மே 25: வேலூர் சத்துவாச்சாரி விஜயராகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகாந்த். இவரது மனைவி லட்சுமி(22). இவர்கள் வீட்டிற்கு எதிரில் வசிப்பவர் வில்வன்கோதை(31) டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 22ம் தேதி போதையில் இருந்த வில்வன்கோதை, லட்சுமியிடம் பணம் கேட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தனது கணவரிடம் லட்சுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து வில்வண் கோவைக்கும், லட்சுமியின் கணவர் விஜயகாந்த்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம், வில்வன் கோதை, லட்சுமியை ஆபாசமாக திட்டி, சைகை காண்பித்ததாக தெரிகிறது. இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் லட்சுமி புகார் கொடுத்தார். அதன்பேரில் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து வில்வன் கோதையை கைது செய்து விசாரித்து வருகிறார்.
பெண்ணை ஆபாசமாக திட்டிய டிரைவர் கைது
0