களக்காடு,செப்.20:களக்காடு அருகே உள்ள கீழவடகரை, இந்திரா காலனியை சேர்ந்தவர் குமார் மனைவி ராசாத்தி (43). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் மகன் முருகனுக்கும் (50) நிலத்தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று ராசாத்தி ஊருக்கு அருகே உள்ள தனது வயலில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகன், அவரது மனைவி ராஜேஷ்வரி (45), மகள் அனிதா (21) ஆகியோர் எங்கள் மீது ஏன் போலீசில் புகார் செய்தாய்? என கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த முருகன், ராஜேஷ்வரி, அனிதா ஆகியோர் ராசாத்தியை தலைமுடியை இழுத்து தாக்கியதாகவும், அரிவாளால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.இதுபற்றி ராசாத்தி களக்காடு போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ. வேலம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி முருகன் உள்பட மூவரையும் தேடி வருகிறார்.