சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் என்ஜிஓ காலனியை சேர்ந்த ரகோத்மனின் மனைவி சத்தியபாமா (45). அப்பகுதியில் தட்டச்சு பயிற்சி நிலையம் நடத்தி வரும் இவர், நேற்று முன்தினம் மாலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த மர்மநபர் முகவரி கேட்பது போல் சத்தியபாமா கழுத்தில் அணிந்திருந்த சுமார் 2.5 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றார். சங்கரன்கோவில் தாலுகா போலீசார் மர்ம நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.