சிவகாசி, மே 6: சிவகாசியில் பெண்ணிடம் நகை, பணத்தை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிவகாசி அருகே பள்ளப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் விஜயலட்சுமி(52). திருவிழாவிற்கு சென்ற இவர் திருவில்லிபுத்தூரில் தனியார் பஸ்சில் ஏறி சிவகாசி பஸ் ஸ்டாண்டிற்கு வந்தார். பஸ் ஸ்டாண்டிலிருந்து மினி பஸ் ஏறி , டிக்கெட் எடுப்பதற்காக பர்சை திறந்து பார்க்கையில் அதில் இருந்த நான்கரை பவுன் தங்கச் செயின், ரூ.5500 பணம் திருடு போனது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.