திருப்பூர்: திருப்பூர், நெரிப்பெரிச்சல் அடுத்த தோட்டத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். இவருடையமனைவி சங்கீதா (40). இந்நிலையில் சங்கீதா நேற்று வீட்டிற்கு வெளியில் துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் சங்கீதா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கநகையை பறித்துகொண்டு தப்பினார். உடனே சங்கீதா கூச்சலிட்டதும் அந்த வாலிபரை அக்கம்பக்கத்தினர் துரத்தி பிடித்து தர்மஅடி கொடுத்து திருமுருகன் பூண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்குசென்ற ரோந்து போலீஸ், அஸ்கர் அலி திருடனை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (27) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவுந்து விக்னேஷை கைது செய்து சிறையிலடைத்தனர்.