திருப்பூர், ஜூன் 25: திருப்பூர் கனியாம்பூண்டி அடுத்த தொழிலாளர் காலனியை சேர்ந்தவர் காளீஸ்வரி (26). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், காளீஸ்வரி நேற்று இரவு வீட்டின் அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, பின்னால் பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் காளீஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தார்.
இது குறித்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தி சிசிடிவி கேமரா காட்சிகளை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடையவரை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.