தேவதானப்பட்டி, ஜூன் 3: பெரியகுளம் தென்கரையை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம்(65). இவர் தனது மனைவியுடன் ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுaரத்திற்கு உறவினர் வீட்டிற்கு டூவீலரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து நேற்று டூவீலரில் ஆண்டிபட்டியில் இருந்து குள்ளப்புரத்தில் இருந்து அணைக்காரபட்டி வழியாக வைகை அணை ஆற்றை கடந்து வந்து கொண்டிருந்தனர்.அப்போது எதிரே டூவிலரில் வந்த அடையாளம் தெரியாத நபர் சண்முகம் மற்றும் அவரது மனைவியை தாக்கி கீழே தள்ளிவிட்டு அவரது மனைவியின் கழுத்தில் இருந்து 4.5 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச்சென்றனர்.
பெண்ணிடம் செயின் பறிப்பு
0