போச்சம்பள்ளி, செப்.5: கிருஷ்ணகிரி மாவட்டம், நாகம்பட்டி போயர்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி(55). இவர் அந்த பகுதியில் உள்ள திருவண்ணாமலை நெடுஞ்சாலையோரம், பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, கடைக்கு டூவீலரில் வந்த 2பேர், செல்வியிடம் பீடி கேட்டு ₹10 கொடுத்துள்ளார்.அப்போது பீடியை எடுக்க செல்வி திரும்பியபோது, அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து டூவீலரில் மின்னல் வேகத்தில் தப்பினர். அவர்களை பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில், மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்து சென்ற வாலிபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.
பெண்ணிடம் செயின் பறித்த 2 பேருக்கு வலை
previous post