ஊத்தங்கரை, ஆக.7: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வெப்பாலம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி நாகவேணி (28). ரமேசும் அதே பகுதியில் வசிக்கும் சிலம்பரசன் (35) என்பவரும், ஒரே கம்பெனியில் லாரி டிரைவராக வேலை செய்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி ரமேஷ் வீட்டில் இல்லாதபோது, சிலம்பரசன் அவர் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு தனியாக இருந்த நாகவேணியிடம் ஆசைக்கு இணங்குமாறு கூறி அத்துமீறலில் ஈடுபட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த நாகவேணியை தகாத வார்த்தையால் திட்டி, ஆபாசமாக போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டினார். இதுகுறித்து நாகவேணி ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான லாரி டிரைவர் சிலம்பரசனை வலைவீசி தேடி வருகின்றனர்.