தொண்டாமுத்தூர், ஆக.19: தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உள்புகார் குழு மற்றும் மகளிர் மன்றம் இணைந்து நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. முனைவர் கௌசல்யா தேவி வரவேற்றார். இதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் கலைவாணி பேசுகையில்,“இன்றைய நவீன உலகில் பெண்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுகின்றன. அச்சிக்கல்களுக்கு இடம் கொடுக்காமல் அதிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார். மனநல மருத்துவர் யசோதா பேசுகையில் ‘‘மனித மனத்தின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது.
அதில் பாலின வேறுபாடுகள் குறித்த புரிதல்கள், சமூகத்தில் நிலவி வரும் பாலியல் ரீதியான குறியீடு குறித்த விளக்கங்கள், பாலியல் ரீதியான துன்பங்களில் இருந்து பெண்கள் எவ்வாறு விடுபட வேண்டும். மேலும், தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தனது கல்வி, வேலை வாய்ப்பு, கட்டுப்பாடுகளுடன் கூடிய சுதந்திரம். தங்களின் ஆடைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் பிறருக்கு தவறான எண்ணங்களை தூண்டுவதாக இருக்கக் கூடாது. பெண்களைப் போலவே ஆண்களுக்கும் பல்வேறு நிர்பந்தங்கள் உள்ளது. அவரின் வேலை குடும்பச் சூழல்கள், முடிவெடுகக் கூடிய சூழல், ஆண்களின் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் தவிர்ப்பது போன்றவற்றை கூறலாம்’’ என்றார்.