ஈரோடு, ஆக.7: நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் அசோகன் (49). இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் தங்கி அப்பகுதியில் பெட்ஷாப் நடத்தி வருகிறார். சோகன் நடத்தி வரும் பெட்ஷாப்பில் உள்ள மீன், பறவை, நாய், போன்றவற்றை பார்க்க 11 வயது சிறுமி அடிக்கடி அவரது கடைக்கு வந்து சென்றுள்ளார். அப்போது அசோகன் அந்த சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அந்த சிறுமி பெற்றோரிடம் சென்று கடை உரிமையாளர் அசோகன் தொடர்ந்து தன்னிடம் தவறாக நடந்து கொள்வதாக புகார் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஈரோடு அனைத்து மகளிர் காவல்துறையினர் பெட்ஷாப் உரிமையாளர் அசோகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.