மேட்டூர், டிச.11: மேட்டூர் அருகே ராமமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி(37), லாரி டிரைவர். நேற்று முன்தினம் இவரது டூவீலரில் பெட்ரோல் தீர்ந்து போனதால், நண்பரான லாரி டிரைவர் அருண்குமார்(37) என்பவருடன் பங்கிற்கு சென்றுள்ளார். பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு இருவரும் டூவீலரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அருண்குமார் பீடி பற்ற வைத்துள்ளார். அப்போது, பெட்ரோல் பாட்டிலில் குபீரென தீப்பற்றியது. பின்னர், பூபதி மற்றும் அருண்குமார் ஆகியோர் மீதும் பற்றியது. இதில், உடல் கருகி படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து கருமலைகூடல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பெட்ரோல் பாட்டிலில் தீப்பிடித்து லாரி டிரைவர்கள் 2பேர் காயம்
0
previous post